தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டிற்கு சுகாதார அமைச்சரின் பதில்கள்

 

தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டிற்கு சுகாதார அமைச்சரின் பதில்கள்


முறையான அனுமதியின்றி தெரிவு செய்யப்பட்ட இந்திய மருந்து நிறுவனம் ஒன்றின் ஊடாக இலங்கைக்கு மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பதிலளித்துள்ளார்.

உரிய அனுமதியின்றி தெரிவு செய்யப்பட்ட இந்திய மருந்து நிறுவனம் ஒன்றின் ஊடாக இலங்கைக்கு மருந்துகளை கொண்டு வந்தமைக்கு சுகாதார அமைச்சரும் அந்த அமைச்சின் அதிகாரிகளுமே பொறுப்பு என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஜி.ஜி.சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் எந்தவொரு கொள்முதல் விதிமுறைகளும் மீறப்படவில்லை என தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021