காதலியை கழுத்தை அறுத்து கொன்ற பல்கலைக்கழக மாணவர் விளக்கமறியலில்

 

காதலியை கழுத்தை அறுத்து கொன்ற பல்கலைக்கழக மாணவர் விளக்கமறியலில்


24 வயது காதலியை கூரிய ஆயுதத்தால் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர் பசிந்து சதுரங்க டி சில்வாவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (30) உத்தரவிட்டார்.

சந்தேகநபர் நேற்றைய தினம் (30) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை எனவும், அவர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையின் மனநல பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

நேற்று திறந்த நீதிமன்றில் நடைபெற்ற மாணவி சதுரிகா மல்லிகாராச்சியின் மரணம் தொடர்பான முதற்கட்ட நீதவான் விசாரணையின் போது, ​​அவரது தந்தை 
கண்ணீருடன் சாட்சியமளித்தார்.

இரண்டு பெண் பிள்ளைகளைக் கொண்ட தனது குடும்பத்தின் மூத்த மகளான சதுரிகா நுகேகொட, அனுலா வித்தியாலயத்தில் உயர்தரப் பாடசாலையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்தில் பிரவேசித்து கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்ததாகவும், அவர் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்று வந்ததாகவும் அவர் சாட்சியமளித்தார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !