இலங்கையின் பொறுப்புக்கூறல்! அமெரிக்காவின் முனைப்புக்கள்

 

இலங்கையின் பொறுப்புக்கூறல்! அமெரிக்காவின் முனைப்புக்கள்


இலங்கையின் போர்க்குற்ற பொறுப்புக்கூறல் தொடர்பில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதித்துறையின் தலைவரான தூதுவர் பெத் வான் ஷாக் கடந்த வாரம் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

கனடாவிற்கு சென்றிருந்த அவர் அங்கு, தமிழ் புலம்பெயர் குழுக்களைச் சந்தித்தார்.

இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை,தமிழ் புலம்பெயர்வாளர்களுடன் தாம் நடத்தியதாக அவர் ட்விட் செய்துள்ளார்.

இலங்கையின் ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்கு மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது இன்றியமையாதது என்று அவர் தமது ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம், இலங்கையின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை செயலகம்,இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமைகளை மோசமாகப் பாதித்த பொருளாதாரக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தியதன் விளைவாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !