ஓய்ந்தது கிளிநொச்சியின் ஊடகக்குரல்: நிபோஜனின் மறைவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் இரங்கல்

 

ஓய்ந்தது கிளிநொச்சியின் ஊடகக்குரல்: நிபோஜனின் மறைவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் இரங்கல்


கிளிநொச்சியின் ஊடகப் பரப்பில் தனக்கெனத் தனியிடம் பிடித்திருந்த அன்புத்தம்பி நிற்சிங்கம் நிபோஜனின் திடீர் மரணம் எம் எல்லோருக்கும் தீராப்பெருவலியைத் தந்திருக்கிறது. 

மிகச்சொற்ப வயதில், தன்முனைப்பாலும், ஊடகத்துறை மீதான அதீத ஆர்வத்தாலும் அத்துறையின் ஆழ அகலங்களையெல்லாம் அறிந்த ஒருவனாக தன்னைத்தானே தகவமைத்துக்கொண்ட தம்பி நிபோஜன், இத்தனை அகாலத்தில் எமைப்பிரிவான் என நாம் யாரும் நினைத்தேனும் பார்த்ததில்லை. 

ஓரிரு மணிநேரங்களின் முன்னர் என்னோடு தொலைபேசியில் உரையாடிய  அந்தக் குரலொலி மறையும் முன்னரே அவனது உயிரும் பிரிந்திருக்கிறது. அண்மைக்காலமாக எமைச் சார்ந்தவர்களிடையே நிகழ்ந்தேறும் ஏற்கவே முடியாத இளவயது மரணங்களின் நீட்சியில் இணைந்துகொண்ட தம்பி நிபோஜனின் ஆத்மா அமைதிபெறட்டும் பாராளுமனர் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !