வீடு ஒன்றில் காணப்பட்ட குழியிலிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள்

 

வீடு ஒன்றில் காணப்பட்ட குழியிலிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள்



அக்மீமன ஹியர் பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் குழி ஒன்றில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கிகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

இது தவிர கைவிலங்கு, ஒரு கைவிலங்கு உறை, மற்றும் செயலிழக்கச் செய்யப்பட்ட ஆயுதம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இவை மீட்கப்பட்டுள்ளன

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டில் தோண்டி மூடப்பட்ட அடையாளம் காணப்பட்ட இடங்களை தோண்டியபோதே உறை ஒன்றில் இடப்பட்டிருந்த நிலையில் இவை கைப்பற்றப்பட்டன.

குறித்த வீட்டின் உரிமையாளர் கொரியாவில் பணிபுரிந்து வருவதோடு, இந்த இடம் அவரால் புதிதாக வாங்கப்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரிய வந்துள்ளது

மேலதிக விசாரணைகளுக்காக அனைத்துப் பொருட்களும் அக்மீமன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !