ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 52வது அமர்வு இன்று ஆரம்பம்!

 

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 52வது அமர்வு இன்று ஆரம்பம்!

#Sri Lanka #Sri Lanka President #UN #Geneva #Human Rights #Switzerland #swissnews #Lanka4

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 52வது அமர்வு இன்று இலங்கை  நேரப்படி பிற்பகல் 03.00 மணிக்கு   சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.

.
இன்று ஆரம்பமாகும் இந்த அமர்வு ஏப்ரல் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மார்ச் மாதம் 8 ஆம் 9 ஆம் திகதியும் இலங்கை தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

இம்முறை ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் தான் கலந்து கொள்ளவில்லை எனவும் இலங்கை சார்பில் அதிகாரிகள் குழுவொன்று ஜெனிவா செல்லவுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

சட்ட மா அதிபர் திணைக்களம், வௌிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் கூறினார்.

 இதேவேளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா, இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் மனித உரிமைகள் தொடர்பில் சில போக்குகள் காணப்படுவதாகவும் சட்டத்தரணி கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !