சர்வதேச நாணய நிதியத்தின் பணம் கிடைக்காவிட்டால் என்ன செய்வது? ஜனாதிபதி கூறுகிறார்

 

சர்வதேச நாணய நிதியத்தின் பணம் கிடைக்காவிட்டால் என்ன செய்வது? ஜனாதிபதி கூறுகிறார்

#Sri Lanka #Sri Lanka President #Ranil wickremesinghe #IMF #Finance #Tamilnews #sri lanka tamil news #Lanka4

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஒதுக்கீடுகள் எதிர்பார்த்தபடி மார்ச் மாதத்தில் கிடைக்காவிட்டால், எதிர்வரும் காலப்பகுதிக்கு ரொக்க கையிருப்பை பேண வேண்டியிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், செலவுகளை நிர்வகிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

குறித்த வருடத்திற்கான செலவீனங்களை ஈடுசெய்யும் வகையில் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளமையினால் தற்காலிகமாக பணத்தை விடுவிக்க முடியாது எனவும் அந்தப் பதிவில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக தாம் ஆறு பில்லியன் ரூபாவைக் கேட்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பொலிஸாரும் மதிப்பீட்டை விட அதிகமான பணத்தைக் கேட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய நிலைமைகளின் கீழ் தற்காலிக கொடுப்பனவுகளை வழங்க முடியாது என்பதால், வரவு செலவுத் திட்டத்தை மீண்டும் சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சகத்திடம் கேட்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !