தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவால் மக்கள் சக்தியை வெல்ல முடியாது: அனுரகுமார திஸாநாயக்க

 

தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவால் மக்கள் சக்தியை வெல்ல முடியாது: அனுரகுமார திஸாநாயக்க

#Sri Lanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Protest #Colombo #Election #Tamilnews #sri lanka tamil news #Lanka4

நாட்டிலிருந்து குடும்ப ஆட்சியை அகற்றுவதற்காக பெருமளவு மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதால் அச்சமடைந்துள்ள அரசாங்கம் உள்ளூராட்சி  தேர்தலை ஒத்திவைப்பதற்காக சதிசெய்கின்றது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எந்த வழிமுறையையும் பயன்படுத்தி  நாங்கள் போராட்டத்தில் வெற்றிபெறுவோம் என அவர்  என தேசிய மக்கள் சக்தியின் தலைவர்  அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்தும் தமது போராட்டத்தை கண்ணீர்ப்புகை அல்லது நீர்த்தாரை பிரயோகங்கள் மூலம் மாற்றியமைக்க முடியாது என கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நேற்று  நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் அனுரகுமார திஸாநாயக்கதெரிவித்தார்.

"மருந்து இல்லாமல் வாடும் மக்களுக்காகவும், வேலையில்லா இளைஞர்களுக்காகவும், விவசாயிகள், மீனவர்கள், கஷ்டப்படும் உழைக்கும் மக்களுக்காகவும் நடக்கும் இந்தப் போரில் வெற்றி பெறுவோம். ஊழலற்ற நாட்டை உருவாக்க இந்தப் போரில் வெற்றி பெறுவோம். ஊழல் இல்லாத போதைப்பொருள் இல்லாத பொதுமக்கள் பணம் கொள்ளையடிக்கப்படாத நாட்டை உருவாக்குவதற்கான போராட்டத்தில் நாங்கள் வெற்றிபெறுவோம்,இது இந்த தலைமுறையின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தொழில் வல்லுநர்கள், பாதுகாப்புப் படையினர், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் விழிப்புள்ள மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்கு தேசிய மக்கள் முன்னணியைச் சுற்றி அணிதிரளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டில் குடும்ப ஆட்சியை இல்லாதொழிக்க தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள மாபெரும் மக்கள் சக்தியினால் குழப்பமும் அச்சமும் அடைந்துள்ள நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 நாட்டில் முதல்முறையாக ஒடுக்கப்பட்ட மக்களின் ஆட்சி அமைக்க மக்கள் முன்வந்துள்ளனர். அதனால்தான் இவ்வளவு கொந்தளிப்பு. அதிகாரம் கைமாற வேண்டும் என்று கூறப்பட்டது. ராஜபக்ச, விக்கிரமசிங்க மற்றும் பிரேமதாசக்களுக்கு இடையில், அவர்கள் ஒருபோதும் இதுபோன்ற தேர்தலை நடத்தியதில்லை.  , "என்று அவர் கூறினார்.

தேர்தலை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைப்பதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவால் எங்களை  அடக்க முடியாது என திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !