தொல்லியல் திணைக்களமே தமிழர்களை தொலைக்காதே: வவுனியாவில் வெடித்த போராட்டம்

 

தொல்லியல் திணைக்களமே தமிழர்களை தொலைக்காதே: வவுனியாவில் வெடித்த போராட்டம்

#Sri Lanka #Vavuniya #Protest #Vanni #Mullaitivu #Lanka4 #Sri Lanka President

வவுனியா  ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து வீசப்பட்டமைக்குஎதிர்ப்பு தெரிவித்து பாரிய மக்கள் போராட்டம்  ஒன்று இன்று இடம்பெற்றது.

 வவுனியா கந்தசாமி ஆலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணி  வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது.

"தொல்லியல் திணைக்களமே தமிழர்களை தொலைக்காதே" , "தொல்லியல்துறை அடாவடி நிறுத்தப்படவேண்டும்", எழுத்திலும் ஆய்தம் எம் இறைவனும் ஆயுதம், வெடுக்குநாறி தமிழர் நிலம், வெட்டுக்குநாறி தமிழனின் புலம், இன அடையாளத்தை அழிக்காதே, போன்ற வாசகங்களை ஏந்தியாவாறு குறித்த போராட்டம் இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணியில் பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சமய பெரியோர்கள், பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்புக்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vavuniya protest
vavuniya protest
vavuniya protest
vavuniya protest
vavuniya protest
vavuniya protest

 

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !