பலாலியில் பழமை வாய்ந்த இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளது

 

பலாலியில் பழமை வாய்ந்த இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளது

#Jaffna #Robbery #Temple #Sri Lanka #sri lanka tamil news #Lanka4

யாழ்ப்பாணம் பலாலியில்  இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பழமை வாய்ந்த இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளன.

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் விக்கிரகங்கள் இரண்டினை காணவில்லை என ஆலய பரிபாலன சபைத் தலைவர் பலாலி காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார்.

அத்துடன் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும் விக்கிரங்கள் காணாமல் போயுள்ளமை சம்பந்தமாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி மீண்டும் இந்த ஆலயத்துக்கு சென்ற   போது விக்கிரகங்கள் அனைத்தும்; இருந்தன.

எனினும் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் திகதி திருவம்பாவை தினத்திற்கு சென்ற பொழுது முருகன் சிலை காணாமல் போயிருந்தது 

தற்போது அம்மன் விக்கிரகம்  காணாமல் போயுள்ளது.

வடக்கின் மிகப்பெரும் சிறிலங்கா இராணுவ தளமாக விளங்குகின்ற பலாலி இராணுவ தளத்தின் உயர் பாதுகாப்பு நிலையத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் விக்கிரகங்கள் இராணுவத்தினருக்கு தெரியாமல் எவ்வாறு காணாமல் போயிருக்கும் என்று ஆலய நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அண்மைக்காலமாக பௌத்தமயமாக்கலின் அங்கமாக இடம்பெறும் கச்சதீவில் பௌத்த ஆதிக்கத்தினை மேற்கொண்டமை வெடுக்குநாறிமலையில் ஆதி லிங்கேஸ்வரர் சிலையினை உடைத்தெறிந்தமை உள்ளிட்ட செயல்களின் தொடர்ச்சியாகவே பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் விக்கிரகங்களும் சூறையாடப்பட்டுள்ளனவா என சந்தேகம் எழுகின்றது

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !