15 மாவட்டங்களின் 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு!

 

15 மாவட்டங்களின் 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு!


 15 மாவட்டங்களில் உள்ள 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, அம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பல பிரதேசங்கள் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில்  டெங்கு அபாய பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருணாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு அபாயப் பகுதிகளில் உள்ளடங்கியுள்ளன.

இதேவேளை, மேல்மாகாணத்தின் சகல பிரதேசங்களையும் உட்படுத்தி கடந்த 26ஆம் திகதி விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !