வரி தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக தனி நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கு முன்மொழிவு
வரி தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக தனி நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கு முன்மொழிவு
#Sri Lanka #Lanka4 #srilankan politics
வரி தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக தனி நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கைகளுக்கு தனி நீதிமன்றம் இல்லாததால் தற்போதுள்ள வரி தொடர்பான விவகாரங்களில் பாரிய தாமதம் ஏற்படுவதாக அவர் கூறினார்.
இதேவேளை, தற்போதைய வரி அறவீட்டில் நிலவும் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளை நீக்கி வரி செலுத்துதலை முறைப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த யோசனை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ருவன்வெல்லவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
Comments
Post a Comment