நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டதற்கான காரணம் வெளியானது
நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டதற்கான காரணம் வெளியானது

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் போது சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதற்காக பேசப்பட்டு வரும் நடாஷா எதிரிசூரிய, 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசன சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன அல்லது மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிடும் சட்டத்தின் 03 ஆவது பிரிவின் கீழ் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய, சிங்கப்பூர் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் போலீஸ் சைபர் கிரைம் புலனாய்வுப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டார்.
நடாஷா எதிரிசூரிய வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வருகை தந்த போது அவரை கைது செய்யுமாறு சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகளிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி நேற்று இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளால் ஜெயனி நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
31 வயதான நடாஷா எதிரிசூரிய கல்கிஸ்ஸ பகுதியில் வசிப்பவர். ஹென்நாயக்க முடியசெலவைச் சேர்ந்த பத்தும் பண்டார எகொடவத்த என்ற நபரும் அவருடன் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
எவ்வாறாயினும், நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டதன் பின்னர், அவரும் தனது விமானத்தை விட்டு வெளியேறி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திரும்பியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவரும் மலேசிய விமானத்தில் கோலாலம்பூர் சென்று அங்கிருந்து மற்றொரு விமானத்தில் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
Comments
Post a Comment