O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு!

 

O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு!



க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெறும் எந்த பாடசாலைகளிலும் வெளி தரப்பினர் நுழைய அனுமதி இல்லை என்று கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும், பரீட்சை தொடர்பான ஆவணங்களைத் தவிர வேறு எந்த தாள்களையும் மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நேற்று (29) ஆரம்பமான க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதற்காக 472,553 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதோடு நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021