அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு எதிராக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மேன்முறையீடுகள்!

 

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு எதிராக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மேன்முறையீடுகள்!

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு இதுவரையில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மேன்முறையீடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த சபையின் உறுப்பினரான கமல் பத்மசிறி இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

மேன்முறையீடுகள் மாத்திரமன்றி ஆட்சேபனைகளுக்கும் சந்தர்ப்பம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆட்சேபனைகளை பெயர் குறிப்பிடாமல் சமர்ப்பிக்கலாம் எனவும் நலன்புரி நன்மைகள் சபையின் உறுப்பினரான கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நலன்புரி தொடர்பான மேன்முறையீடுகளை சமர்ப்பித்த பின்னரும், சலுகைகளுக்கு தகுதியுடைய உரிய தரப்பினர் பட்டியலில் இல்லை எனின் அந்த விடயத்தில் தலையிடுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டமையினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !