இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பம்
இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பம்

இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று காலை கொழும்பில் ஆரம்பமானது.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற அதன் ஆரம்ப அமர்வில் இலங்கை தூதுக்குழுவின் பிரதான பேச்சுவார்த்தையாளர் கே.ஜே. வீரசிங்க தெரிவிக்கையில்,
இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து திருப்தி அடைய முடியும் என்றும், அது ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவின்படி நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தாய்லாந்தில் ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெறும் என்றும், அதற்கான ஒப்பந்தம் 2024 மார்ச்சில் கைச்சாத்திடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டு பெப்ரவரியில் நடைபெறவுள்ள இறுதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னர் மேலும் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
Comments
Post a Comment