கட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுவன் பலி : வாகரை பொலிஸ் பிரிவில் சம்பவம்!
கட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுவன் பலி : வாகரை பொலிஸ் பிரிவில் சம்பவம்!
(மண்டூர் ஷமி)
வாகரை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கட்டுமுறிவு பிரதேசத்தில் கட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுவன் ஒருவன் பலியான சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சின்னத்தட்டுமுனை வாகரை பிரதேசத்தைச் சேர்ந்த (14) வயதுடைய நவரெட்ணராசா கிதுசன் என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார்.
சம்பவ தினத்தன்று உறவினர்களுடன் கட்டுமுறிவு காட்டு பிரதேசத்திற்கு மிருக வேட்டைக்கு சென்று கொண்டிருக்கும் போது காட்டுப்பற்ரையில் கையிலிருந்த கட்டுத்துவக்கு சிக்குண்டு வெடித்ததில் குறித்த சிறுவன் சம்ப இடத்திலேயே பலியானதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாணைகளின் போது தெரியவந்துள்ளது.
வாழைச்சேனை நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற கோரளைப்பற்று பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஸ்சானந்தன் அவர்கள் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரதே பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment