காலி முகத்திடலில் மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் யாசகர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம்!

 

காலி முகத்திடலில் மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் யாசகர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம்!

காலி முகத்திடலில் தங்கியுள்ள யாசகர்களை ஹம்பாந்தோட்டை  தியகமவில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

காலி முகத்திடலில் யாசகம் கேட்பவர்களினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் கஷ்டங்களைக்  கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்காக துறைமுக அதிகாரசபை மற்றும் பொலிஸாருடன் இணைந்து கூட்டு வேலைத்திட்டமொன்றை  அமுல்படுத்தப்படுத்தவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

காலி முகத்திடலில் சுமார் 150 யாசகர்களால் மக்களுக்கு பெரும் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகவம் , கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த  யாசகர்களுக்கு ரிதியகம மையத்தில் தங்கியிருக்கும்போது அவர்களுக்கு தங்குமிடம் ,  உணவு மற்றும் பானங்களை வழங்குவதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களுக்கு சமூக பாதுகாப்பு சேவையாக நிதி வழங்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பணிப்புரை விடுத்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !