மின்தூக்கி உடைந்து கீழே வீழ்ந்து முன்னாள் சுகாதார அமைச்சர் சிரில் உயிரிழப்பு !

 

மின்தூக்கி உடைந்து கீழே வீழ்ந்து முன்னாள் சுகாதார அமைச்சர் சிரில் உயிரிழப்பு !

முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் பி.எம்.பி. சிரில் விபத்தொன்றில் உயிரிழந்தார்.

முன்னாள் அமைச்சர் தனது வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த மின்தூக்கியின் உதவியுடன் மூன்றாவது மாடியின் நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக தனது சாரதியுடன் மேல் தளத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது மின்தூக்கி உடைந்து கீழே வீழ்ந்தது.

இதன்போது முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது சாரதி இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் முன்னாள் அமைச்சர்  உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்த முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் பி.எம்.பி. சிரிலுக்கு 89 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021