வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பாக வெளியான அறிவிப்பு!

 

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பாக வெளியான அறிவிப்பு!



விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்கும் சுகாதார அமைச்சின் தீர்மானம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையில் ஈடுபடும் விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் குறித்த தீர்மானம் பிரேரணை ஒன்றின் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

மேலும், அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய அரசாங்கத்தினால் பணிபுரியும் விசேட வைத்தியர்களின் சேவைக்காலம் 63 வயது வரை நீடிக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தனது பிரேரணையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த மனுவை செப்டம்பர் 1ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !