காதலி உயிரிழந்த சோகத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட காதலன்!

 

காதலி உயிரிழந்த சோகத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட காதலன்!


காதலி உயிரிழந்த சில நாட்களின் பின்னர் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.

பலாங்கொடை, வெலிகேபொல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

குடும்பப் பிரச்சினை காரணமாக குறித்த இளைஞரின் காதலி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மனமுடைந்து கடும் விரக்தியுடன் பொழுதைக் கழித்து வந்த இளைஞர் காதலியின்றி தன்னால் வாழ முடியாது எனக் கூறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞர் இறப்பதற்கு முன்னர் தனது காதலியின் பிரிவு குறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றையும் பதிவேற்றியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !