ஜனாதிபதியை தலையிடுமாறு அவசர கடிதம் : இலங்கை மருத்துவ சங்கம்!

 

ஜனாதிபதியை தலையிடுமாறு அவசர கடிதம் : இலங்கை மருத்துவ சங்கம்!


மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் செயற்பாடுகள் தற்போது முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தில் தலையிடுமாறு ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் வைத்தியர்கள் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரத்ன,

"இது மிக உயர்ந்த தரத்துடன் பராமரிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவது உண்மையில் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் செய்யப்பட வேண்டிய ஒரு விடயம். இது இடம்பெறாதது வருத்ததிற்குரிய விடயமாகும். இந்த ஒழுங்குமுறை செயல்முறை முற்றிலும் உடைந்துவிட்டது என்று நாங்கள் நம்புகிறோம். நேற்று நாங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளோம். பல வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதில்லை. இதனால் தரம் குறைந்த மருந்துகள் முறையான மதிப்பீடு இன்றி நாட்டுக்கு வருவதை அவதானிக்க முடிவதாக" கூறினார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !