அவுஸ்திரேலிய இராணுவப் பயிற்சி விமான விபத்தில் 4 வீரர் மாயம்

 

அவுஸ்திரேலிய இராணுவப் பயிற்சி விமான விபத்தில் 4 வீரர் மாயம்

#Australia #United_States #world news #Lanka4 #Military

அவுஸ்திரேலிய இராணுவப் பயிற்சி விமான விபத்தில் 4 வீரர் மாயம்

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மாகாணத்தில் இராணுவப் பயிற்சியின் போது, வடகிழக்கு கடலோரப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது.

அந்த ஹெலிகாப்டர் நீரில் மூழ்கியதில், அதில் இருந்த நான்கு ஆஸ்திரேலிய ராணுவ விமானக் குழுவைக் காணவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்தார்.

 மேலும் அவர் கூறுகையில், ‘எம்ஆர்எச்-90 தைபான் வகை ஹெலிகாப்டர் நேற்று இரவு விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய விமானக் குழுவை சேர்ந்த 4 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. 

மாயமான அந்த 4 பேரை தேடும் பணி தொடர்வதால், அமெரிக்க - அவுஸ்திரேலிய தாலிஸ்மேன் சேபர் கூட்டுப்பயிற்சியானது தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றார்.


Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !