தேசிய கீதத்தை பிழையாக பாடிய பிரபல பாடகி: எச்சரித்த விதுர விக்ரமநாயக்க
தேசிய கீதத்தை பிழையாக பாடிய பிரபல பாடகி: எச்சரித்த விதுர விக்ரமநாயக்க

கொழும்பில் நேற்று ஆரம்பமான ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் போட்டியின் ஆரம்ப விழாவில் தேசிய கீதம் பாடப்பட்ட விதம் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
உமாரா சின்ஹவன்ச பாடிய இந்தப் பாடல், இதுவரை பாடப்பட்டதை விட வித்தியாசமான முறையில் பாடப்பட்டதாகவும் ஒரு முக்கிய வரியை தவறாக உச்சரித்து இலங்கை தேசிய கீதத்தை பாடியதாக விமர்சிக்கப்படுகிறது.
கிரிக்கெட் அமைப்பு, போட்டி அமைப்பாளர்கள் மற்றும் பாடகர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இதேவேளை காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைக் குறிப்பிட்டு, புத்த சாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, சட்ட நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்துள்ளார்.
தேசிய கீதத்தை ராப் அல்லது ரீமிக்ஸ் செய்ய முடியாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய கீதத்தை பாடுவதற்கு ஒரு நிலையான முறை இருப்பதாகவும், இந்த போக்குகளுக்கு இடமளித்தால், எதிர்காலத்தில் தேசிய கீதம் நிர்வாணமாக பாடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
Comments
Post a Comment