அடையாள வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார நிபுணர்கள்!

 

அடையாள வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார நிபுணர்கள்!

#Sri Lanka #Health #strike #Lanka4

அடையாள வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார நிபுணர்கள்!

சுகாதார பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதை தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுற்றறிக்கையை இரத்துச் செய்யாமைக்கு எதிராக  அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த போராட்டம் வரும் (03.08) திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

சுற்றறிக்கைக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் இதுவரை பதிலளிக்கவில்லை என அச் சங்கத்தின்  தலைவர் ரவி குமுதேஷ் கூறுகிறார்.  

இதேவேளை, 100,000 கான்டாக்ட் லென்ஸ்கள் கொள்வனவு செய்வதற்கான முறைகேடு தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்தியர்  சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !