இலங்கை வருகிறது 'கஞ்சர்'!

 

இலங்கை வருகிறது 'கஞ்சர்'!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குக்ரி வகை ஏவுகணை தாங்கிய கடற்படைக் கப்பலான 'கஞ்சர்' இன்று சனிக்கிழமை (29) திருகோணமலைக்கு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளது.

'கஞ்சர் ' கடற்படைக் கப்பலை இலங்கையில் வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலையில் கப்பல் தரித்து நிற்கும் போது இலங்கை கடற்படைக் கப்பலுடன் கடல்சார் கூட்டுப் பயிற்சியும் 31 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த கப்பலை 30 ஆம் திகதியன்று பாடசாலை மாணவர்கள் மற்றும் இலங்கை மக்கள் பார்வையிட முடியுமென இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதன்போது யோகா அமர்வு, கடற்கரையை சுத்தம் செய்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

சர்வதேச யோகா தினத்தை அனுஸ்டிப்பதற்காக ஐ.என்.எஸ் வாஹிர் என்ற கப்பல் ஜூன் 19 முதல் 22 வரை இலங்கையில் தரித்து நின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !