களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுல ஸ்தாபகர் மற்றும் 34வது வருட குருகுல தினம்!
களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுல ஸ்தாபகர் மற்றும் 34வது வருட குருகுல தினம்!
(ரவிப்ரியா)
மண்முனை தென் எருவில் பிரதேசசெயலகப் பிரிவில் சிறப்பாக இயங்கிவரும் திருஞானசம்பந்தர் குருகுலம் சனியன்று (19) காலை அதன் 34வது ஆண்டு ஸ்தாபகர் தினத்தையும் குருகுல தினத்தையும் எளிமையாக கொண்டாடியது.
குருகுல மண்டபத்தில் அதன் தலைவர் ப.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் பிரதம அதிதியாக போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் சோ.ரங்கநாதனும், கௌரவ அதிதியாக சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பரிபரலன சபை உபதலைவர் க.ஜெயகரனும்;. விசேட அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிகாரி டாக்டர் ம.ருதேசனும் கலந்து கொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பொறுப்பதிகாரி சி.சிவகுமார், பிரதேச சிறுவர் நன்னடத்தைப் பொறுப்பதிகாரி ஜனாப் எம்.என்.எம்.றபாஸ் களுதாவளை தேசிய பாடசாலை அதிபர் க.சத்தியமோகன், மற்றும் விக்னேஸ்வரர் வித்தியாலய அதிபர் தெ.தயாபரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அழைப்பு அதிதியாக ஓய்வுநிலை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி அமலநாதனும், கடந்த காலங்களில் குருகுல வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கௌரவம் பெறும் பிரதேச பிரமுகர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.;
அதிதிகள் வரவேற்கப்பட்டு குருகுல கொடியேற்றலைத் தொடர்ந்து ஸ்தாபகர் சுவாமி பொன்னையா சிலைக்கு பிரதம மறறு;ம் விசேட அதிதிகள் மலர்மாலை அணிவித்தனர், சம்பிரதாய விளக்கேற்றலைத் தொடர்ந்து வரவேற்பு நடனம். ஸ்தாபகர் நினைவுரை. குருகுல வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள், சமையலுக்கு தொடர்ந்து உதவிய பெண் சேவையாளர்கள், குருகுல பணியாளர்கள் என பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி சேவையாளர் கௌரவிப்பு, குருகுல மாணவர்களின் வில்லுப்பாட்டு; என்பன இடம் பெற்றன.
அதிதிகள் உரை என்பன மாணவர்களின் சிந்தனைத் தூண்டலாக அமைந்தது குறிப்பிடத் தக்கது. தலைவர் தனது நினைவுப் பேருரையில் சுவாமியின் வரலாறு, அவரின் குருகுலத்தின் ஸ்தாபகராக இருந்து ஆற்றிய அர்ப்பணிப்பான பணிகள் சிரமங்கள், சவால்கள் என்பன பற்றி இரத்தினச் சுருக்கமாக தெரிவித்தார்.
சுவாமிகளால் களுதாவளை சுயம்பலிங்க பிள்ளையார் ஆலய வளாகத்தில். யுத்தகாலத்தைக் கருத்திற் கொண்டு நிர்க்கதியான பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் காப்பகமாக 1989 காலப் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டது. பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்திற்கருகில் 1993.02.19ல் சிறிய கட்டடத்துடன் அதன் இரண்டாம் கட்ட வளர்ச்சி ஆரம்பமானது.
குறித்தகாலப் பகுதியில் மண்முனை தென் எருவில் பிரதேச செயலகத்தில் உதவி அரசாங்க அதிபர்களாகவும் .பிரதேச செயலாளர்களாகவும் கருமமாற்றிய அமலநாதன், இரா நாகலிங்கம் (அன்புமணி). பாஸ்கரன் போன்ற நல் உள்ளங்களால் அதன் வளர்ச்சிக்கான அரச உதவிகள், ஒருநாள் உணவுத் திட்டத்திற்கான (அப்போதைய பிரதேச செயலாளர் அமலநாதனால் அறிமுகப்படுத்தப்பட்ட) செயற்பாடுகளுக்கான பரவலான பூரண ஒத்துழைப்பு என்பவற்றால் சராசரி 40க்கு குறையாத மாணவர்களுடன் 34 ஆண்டுகளைக் கடந்து மட்டக்களப்பு மாவட்டத்திலேயே திறமையாக இயங்கும் சிறுவர் பராமரிப்பு நிலையமாக இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றது.
முதலாவது ஆரம்ப தலைவர் ஆசிரியர் குணநாயகம், மற்றும் ஒருநாள் உணவு திட்டத்திற்கு பிரதேச செயலாளருடன் ஒன்றிணைந்து செயற்பட்டு குருகுல கணக்கறிக்கை தயாரிப்பதிலும் ஆரம்பகாலத்தில் உதவிய தற்போதைய கிழக்கு மாகாணகூட்டுறவு அபிவிருத்தி பயிற்சிப் பிரிவின் பொறுப்பதிகாரி வேல்வேந்தன் பொன்றோரும் பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர்களும் கிராமங்களின் பிரமுகர்களும் குருகுலத்திற்கான அடித்தளத்தை பலமாக்கியதன் மூலம் இன்று பல்வேறு பௌதிக வளங்களுடன் மாணவர்களுக்குரிய போதிய வசதிகளுடன் வாய்ப்புக்களுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.

அத்துடன் சுற்றுச் சூழலும் தென்னை, வேம்பு, மாமரங்கள் நிறைந்து இயற்கை பொலிவை மெருகூட்டிக் கொண்டிருக்கின்றன. அருகில் களுதாவளை மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை) இருப்பதும் மாணவர்களுக்குச் சிறந்த வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எனவே திருஞானசம்பந்தர் குருகுலத்தின் வளர்ச்சியானது தங்குதடையின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
Comments
Post a Comment