இன்றைய வானிலை !
- Get link
- X
- Other Apps
இன்றைய வானிலை !
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 45 கிலோ மீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்று:
காற்று தென்மேற்கு திசையில் மணிக்கு 25 தொடக்கம் 35 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும்.
அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் புத்தளம் முதல் காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 தொடக்கம் 55 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
கடல்:
கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலும் புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment