சனல் 4 விவகாரம் - ஒய்வுபெற்ற நீதிபதியிடம் விசாரணைகளை ஒப்படைப்பார் ஜனாதிபதி!

 சனல் 4 விவகாரம் - ஒய்வுபெற்ற நீதிபதியிடம் விசாரணைகளை ஒப்படைப்பார் ஜனாதிபதி!


சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியொருவரை நியமிப்பார் என தகவல்வெளியாகியுள்ளது.


சண்டே டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது. சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது.

சனல் 4 தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய விடயங்கள்குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஓய்வுபெற்ற நீதிபதியொருவரை நியமிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

சனல் 4 தொடர்பானா நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான முன்னரான நடவடிக்கையாக இது காணப்படும்.

ஓய்வு பெற்றநீதிபதி சனல்4 தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம் என தெரிவித்தால் நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படும்.

ஏற்கனவே நாடாளுமன்ற தெரிவுக்குழுவும ஜனாதிபதி ஆணைக்குழுவும் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.

சனல் 4 தொடர்பிலான இந்த நிலைப்பாட்டின் மூலம் ஜனாதிபதி சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

சனல் இன் சர்ச்சைக்குரிய வெளிப்படுத்தல்கள் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் அவற்றை முழுமையாக மறுத்துள்ள போதிலும் தீவிர விசாரணை அவசியம் என்பதை ஜனாதிபதிஒப்புக்கொள்ளும் விதத்தில் அவரது நிலைப்பாடு காணப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021