வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி,பண மோசடி - சந்தேக நபர் கைது...!

 வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி,பண மோசடி - சந்தேக நபர் கைது...!



வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 137,000 ரூபாய் பண மோசடி செய்த நபரொருவர் கடுகண்ணாவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேக நபர் கடுகண்ணாவை பிரதேசத்தில் வாடகைக்கு தங்கியிருந்தபோது நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைதான நபர் காலி, மீரன்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடையவர் ஆவார்.


இந்நிலையில், சந்தேக நபருக்கு எதிராக மத்துகம, மஹர, பன்னல, கோட்டை, கேகாலை, தம்புள்ளை, நுவரெலியா, காலி, பலப்பிட்டிய, அநுராதபுரம், நுகேகொடை, களுத்துறை மற்றும் புதுக்கடை நீதிமன்றங்களில் 13 பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது