திருகோணமலை இலுப்பைக் குளம் பகுதியில் விகாரை அமைக்கப்படுவதை எதிர்த்து நாளை ஆர்ப்பாட்டம்!

 

திருகோணமலை இலுப்பைக் குளம் பகுதியில் விகாரை அமைக்கப்படுவதை எதிர்த்து நாளை ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை இலுப்பைக் குளத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் விகாரை அமைக்கப்பட்டுவரும் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஞாயிற்றுக்கிழமை (01) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், குறித்த பகுதியில் கட்டுமானப் பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.


இருப்பினும், கடந்த திங்கட்கிழமை முதல் குறித்த பகுதியில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடை செய்யக் கோரியும் திருகோணமலை மக்களால் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.


இலுப்பைக்குளம் மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களில் காலாகாலமாக தமிழ் மக்களே வாழ்ந்து வருகின்றனர். சிங்கள மக்களின் குடியிருப்பு இல்லாத பகுதியில் விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !