பயணியின் தங்க நகைகளை திருடிய விமான நிலைய ஊழியர் கைது!

 பயணியின் தங்க நகைகளை திருடிய விமான நிலைய ஊழியர் கைது!


நாட்டை விட்டு வெளியேறுவதற்காக விமான நிலையத்திற்கு வந்த பெண்ணிடம் தங்க நகைகளை திருடிய கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


குறித்த சம்பவம் வியாழக்கிழமை (28) இடம் பெற்றுள்ளது.


கைது செய்யப்பட்ட நபர், விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பாதுகாப்புப் பரிசோதகர் ஆவார்.


விமான நிலைய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த ஊழியர் மினுவாங்கொடை ஹீனட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.


சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பெண்ணிடம் இருந்து திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நெக்லஸ், பென்டன் மற்றும் 03 மோதிரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021