வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து, 17 வயது மாணவன் உயிரிழப்பு...!
வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து,
17 வயது மாணவன் உயிரிழப்பு...!
மாத்தறை - கொலொன்ன தடயம் கந்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயர்தர மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மண் மேடு சரிந்துள்ளமையால் அப்பகுதிக்கு தற்போது செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று (22) இரவு, வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், தொரபனே பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது மாணவரே உயிரிழந்தார்.
சடலம் தற்போது ஓமல்பே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Post a Comment