நாமல் ராஜபக்சவிற்கு இன்னும் வயது உள்ளது , நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் : மஹிந்த ராஜபக்ஷ !
நாமல் ராஜபக்சவிற்கு இன்னும் வயது உள்ளது , நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் : மஹிந்த ராஜபக்ஷ !
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (30) காலை கொழும்பு 7 தர்மாயதன வளாகத்தை வந்தடைந்துள்ளார்.
மக்களுக்கு வழங்க முடியாத பொருட்களின் விலை குறித்து கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அப்போது வலியுறுத்தியுள்ளார்.
அங்கு வண எல்லே குணவம்ச தேரரை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி, சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
எந்த நேரத்திலும் தேர்தலுக்கு பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும், அதற்காக அச்சம் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, அவருக்கு இன்னும் வயது உள்ளது எனவும், நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் கூறினார்.
Comments
Post a Comment