வீட்டில் குப்பை கொழுத்திய தீயினால் உயிரிழந்த தாய்...!

வீட்டில் குப்பை கொழுத்திய தீயினால் உயிரிழந்த தாய்...!
வீட்டில் குப்பை கொழுத்திய போது எதிர்பாராத வகையில் ஆடையில் பற்றி எரிந்த தீயினால் காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, சங்கத்தானையை சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 7 ஆம் திகதி பிற்பகல் 5 மணி அளவில் வீட்டில் இருந்து குப்பையினை மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்திய போது அவரது ஆடையில் தீப்பற்றியுள்ளது. காற்று வீசும் திசையில் நின்று இவ்வாறு குப்பைக்கு தீ மூட்டியமையே இதற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதை அடுத்து காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் (12) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவருக்கு 3 ஆண் பிள்ளைகள் மற்றும் 1 பெண் பிள்ளையும் உள்ளனர். கடைசி பிள்ளைக்கு 2 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !