விமான நிலையம் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்கும், வெளியேறும்,குற்றவாளிகளை பொறிவைக்கும் திட்டம் மீண்டும் அமுல்..!

 விமான நிலையம் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்கும், வெளியேறும்,குற்றவாளிகளை பொறிவைக்கும் திட்டம் மீண்டும் அமுல்..!


விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் குற்றவாளிகளைக் பொறிவைக்கும் வகையில் கடந்த வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு,


பல மணித்தியாலங்கள் நிறுத்தப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (1) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இதற்கான உத்தரவை கடந்த மாதம் 19 ஆம் திகதி முதல் குடிவரவு அதிகாரிகள் பெற்றுள்ளனர். 


தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


முப்படைகளின் தளபதிகள், புலனாய்வு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்த விசேட வேலைத்திட்டம் கடந்த 19 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட சில மணித்தியாலங்களில் அமுல்படுத்த தீர்மானம் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !