ஆசிரியரை நம்பி மாணவியை வீட்டு வகுப்புக்கு அனுப்பிய பெற்றோர்..! உணவில் மயக்கருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூர ஆசிரியர்..!

ஆசிரியரை நம்பி மாணவியை வீட்டு வகுப்புக்கு அனுப்பிய பெற்றோர்..! உணவில் மயக்கருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூர ஆசிரியர்..!
மொனராகலை - தொம்பகஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியங்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 07 ஆம் தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியரை பொலிஸார் புதன்கிழமை (18) ஆம் திகதி கைது செய்துள்ளனர். துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவி கலபெத்த பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் உள்ள தாம் பாடசாலையில் கல்வி பயின்று வந்துள்ளார். அங்கு கணிதம் கற்பிக்கும் ஆசிரியரின் மேலதிக வகுப்பிலும் கலந்து கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (08)ஆ ம் திகதி ஆசிரியர், மாணவியின் தாயாரை அழைத்து, கணித பாடத்திற்கு இரண்டு வினாத்தாள்கள் வழங்க வேண்டியுள்ளதால், மாணவியை தன் வீட்டு வகுப்புக்கு அனுப்புமாறு தெரிவித்தார். அதன்படி, மகளை தாயார் வகுப்புக்கு அனுப்பியுள்ளார். தற்போது யாரும் வசிக்காத தனது சகோதரியின் வீட்டிற்கு மாணவியை அழைத்துச் சென்ற ஆசிரியர் குறித்த மாணவிக்கு சாப்பிடுவதற்கு உணவுகளை கொடுத்துள்ள நிலையில், மாணவி மயக்கமடைந்ததை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !