நீர் கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்காது...!

நீர் கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்காது...!
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டாலும், நீர்க் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமில்லை, எனவே அவ்வாறான பிரேரணை முன்வைக்கப்பட்டால் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்காது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணம் தொடர்பில் மக்கள் மாத்திரமே எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனக் கோருவது நியாயமானதல்ல எனவும் மின்சார சபை அதிகாரிகளும் உறுதியளிக்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார். விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் சிறிய அளவிலான விவசாய தொழில் முயற்சியாளர் பங்கேற்பு வேலைத்திட்டத்தின் ஊடாக அனுராதபுரம், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இப்பருவத்தில் 40,000 ஏக்கர் சோளத்தை பயிரிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான சோள விதைகள் மற்றும் யூரியா உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளதுடன், இதற்காக 350 மில்லியன் ரூபா செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் அமரவீர, இந்த நேரத்தில் மின்சாரக் கட்டண உயர்வை பொதுமக்கள் தாங்கிக் கொள்வது சிரமமாக இருப்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !