கப்பம் கோரி உங்களுக்கும் அழைப்புகள் வருகிறதா?

கப்பம் கோரி உங்களுக்கும் அழைப்புகள் வருகிறதா?
வெளிநாட்டில் உள்ள திட்டமிட்ட குற்றவாளி ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோரிய நபரை முல்லேரிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் வர்த்தகருக்கு தனது கைத்தொலைபேசியில் அழைப்பு விடுத்து 20 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் கப்பம் கோரி கொலைமிரட்டல் விடுத்ததாக கடந்த 19ஆம் திகதி பிற்பகல் முல்லேரிய பொலிஸாருக்கு இந்த வர்த்தகரிடம் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த அழைப்பை விடுத்த நபர் நேற்று மதியம் அங்கொட – தெல்கஹவத்த பிரதேசத்தில் வைத்து முல்லேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபருடன் கப்பம் கோரிய தொலைபேசியின் சிம் அட்டையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கொட – தெல்கஹவத்த பிரதேசத்தை சேர்ந்த 51 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கும் தொலைபேசி அழைப்புகள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு மேலும் அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !