பல்கலைக்கழக விண்ணப்பங்கள் கோரல் இன்றுடன் நிறைவு..!

 பல்கலைக்கழக விண்ணப்பங்கள் கோரல் இன்றுடன் நிறைவு..!



2022/23 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் (05) முடிவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி முதல் மூன்று வாரங்களுக்கு இணையவழி ஊடாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


இதன்படி, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றைய தினத்தின் பின்னர் நீடிக்கப்படாது என,


பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.


2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி வெளியிடப்பட்டன.


263,933 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர், அவர்களில் 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !