குடும்ப தகராறு, மனைவி கொலை - கணவன் தப்பியோட்டம்...! நாட்டில் கணவன் மனைவி - கொலை சம்பவங்கள் அதிகரிப்பு
குடும்ப தகராறு, மனைவி கொலை - கணவன் தப்பியோட்டம்...!
நாட்டில் கணவன் மனைவி - கொலை சம்பவங்கள் அதிகரிப்பு
அயகம, இன்னகந்த பிரதேசத்தை சேர்ந்த கணவரால் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு மனைவி உயிரிழந்துள்ளார்.
45 வயதுடைய குறித்த பெண் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு மயங்கிய நிலையில் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்ப தகறாறு காரணமாக, கணவனால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன்,
அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Post a Comment