பலஸ்தீனுக்காக 24 மணி நேரத்தில் 15 கோடி றியாழ்களைச்சேகரித்த சவுதி : மிம்பர்களில் தூண்டுமாறு உத்தரவு

பலஸ்தீனுக்காக 24 மணி நேரத்தில் 15 கோடி றியாழ்களைச்சேகரித்த சவுதி : மிம்பர்களில் தூண்டுமாறு உத்தரவு
சவுதி அனைத்து மிம்பர்களிலும் இன்றைய ஜுமுஆவில் பலஸ்தீன மக்களுக்காகச்செய்யப்படும் நிதி சேகரிப்பில் பங்குகொள்ளத்தூண்டுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுமார் ஒரு மாத காலமாக நிர்க்கதிக்குள்ளாகியுள்ள பலஸ்தீன மக்களின் அடிப்படைத்தேவைகள் உணவு, மருத்துவம், நீர், இருப்பிடங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அனைவரினதும் பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக "ஸாஹிம்" விசேட செயலியின் ஊடாக நன்கொடைகளைத் திரட்டும் திட்டத்தினை நேற்றைய தினம் சவுதி அரேபியா ஆரம்பித்தது. தற்போது வரை சுமார் 15 கோடி சவுதி றியாழ்கள்ச் சேர்த்துள்ள நிலையில், உலமாக்கள் இதில் பங்களிப்புச் செய்யுமாறு மக்களைத்தூண்டி வருகின்றனர். இதன் ஓரங்கமாக இன்றைய தினம் சவுதியின் அனைத்துப்பள்ளிகளிலும் குத்பாக்களில் இத்தர்மத்தில் பங்கு கொள்ள மக்களைத்தூண்டுமாறும் அதனால் இவ்வுலகிலும் மறு உலகிலும் ஏற்படவுள்ள பயன்களை விபரிக்குமாறும் தஃவா, வழிகாட்டல், இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி அப்துல் லத்தீப் ஆலுஸ் ஷேய்க் அனைத்து கதீப்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். பலஸ்தீனப்பிச்சினை ஆரம்பித்ததிலிருந்து வரலாற்று நெடுகிலும் சவுதி அரேபியா எமது உறவுகளான பலஸ்தீன மக்களின் நலன்களுக்காக உழைக்கும் ஒரு தேசம் என்பதை ஞாபகப்படுத்துவோடு இவ்வாறான ஒரு திட்டத்தை முன்னெடுக்க வழிகாட்டிய மன்னர் ஸல்மான், பட்டத்து இளவரசர் முகம்மது பின் ஸல்மான் ஆகியோருக்கு நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் உரித்தாக்கினார். கலாநிதி அஷ்ஷெய்க் எம்.பி.எம்.இஸ்மாயீல் மதனி https://twitter.com/Saudi_Moia/status/1720034733575262537?t=ruOzJuo-yQZbHx5D5lqNDA&s=19

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !