பிள்ளைகளை கொலை செய்யப்போவதாக ஆசிரியையை மிரட்டி, கப்பம் பெறமுயன்ற கிராம உத்தியோகத்தர் கைது...!

பிள்ளைகளை கொலை செய்யப்போவதாக ஆசிரியையை மிரட்டி, கப்பம் பெறமுயன்ற கிராம உத்தியோகத்தர் கைது...!
ஆசிரியை ஒருவரை மிரட்டி கப்பம் பெற முயன்ற கிராம உத்தியோகத்திர் ஒருவர் ஹோமாகம பிடிபன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர். ஹோமாகம பிடிபன தெற்கில் உள்ள சுவபுதுகம பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் மூன்று பிள்ளைகளை கொலை செய்யப் போவதாகவும், மூத்த மகள் மீது அசிட் வீசுவதாகவும் மிரட்டி குறித்த கிராம உத்தியோகத்தர் கப்பம் பெற முயன்றுள்ளார். ஆனால் முன்பள்ளி ஆசிரியையிடம் கப்பம் கொடுக்க பணம் இல்லாததால், ஆசிரியை கிராம உத்தியோகத்தர் தொடர்ந்தும் மிரட்டப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அச்சத்தில் முன்பள்ளி ஆசிரியை கடமைக்கு செல்லாது தனது மூன்று பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்பாது தலைமறைவாகியிருந்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, கிராம உத்தியோகத்தர் கப்பப்பணத்தை பெறும் போது கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021