இளைஞர் சமூகம் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாவது அதிகரிப்பு...!

இளைஞர் சமூகம் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாவது அதிகரிப்பு...!
இளைஞர் சமூகம் மீண்டும் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாவது அதிகரிப்பதைக் காணக் கூடும் என பால்வினை நோய்கள் தொடர்பான நிபுணரான வைத்தியர் திலானி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். அதன்படி, 2022ல் எச்.ஐ.வி இனால் பாதிக்கப்பட்ட 607 பேரில் 73 பேர் இளைஞர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த குழு 15 முதல் 24 வயதுக்குட்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 1ஆம் திகதி உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கொழும்பு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் :- 2018 முதல், 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர் சமூகத்தில் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது. 2022 இல் புதிய எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களில் 73 பேர் இளைஞர்கள். அதாவது 12 சதவீதம். அவர்களில் 66 பேர் ஆண்கள். எனவே, இளைஞர்களிடையே எச்.ஐ.வி. தடுப்பு மிகவும் முக்கியமானது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !