உரிமைக்காக போராடிய பொதுமக்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு : தவறென குரல் கொடுக்கும் கிழக்கின் கேடயம் SM சபீஸ்
உரிமைக்காக போராடிய பொதுமக்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு : தவறென குரல் கொடுக்கும் கிழக்கின் கேடயம் SM சபீஸ்
அட்டளைச்சேனை வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருப்பது மனவேதனையான விடயமாகும் என அக்கரைபற்று பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் கிழக்கின் கேடயம் அமைப்பின் தலைவருமான SM சபீஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிதாக நிர்மான நிர்மாணிக்கப்பட்டிருந்த வைத்தியசாலைக்கட்டிடத்தை பூரணப்படுத்தாமல் திறக்க வேண்டாமென அவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தும் அக்கட்டிடத்தை வலுக்கட்டாயமாக திறப்பதற்கு ஆயத்தம் செய்துள்ளனர்.
இக்குறைகளை ஆளுநரிடம் தெரிவித்திருந்தால், நிச்சயம் ஆளுநர் குறைகளை நிவர்த்தி செய்ததன் பின்னரே திறப்பு விழா நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருப்பார்.
கைது செய்யப்பட்ட பொதுமக்கள் சிறிய இடவசதியில்லாத சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டும் இன்னும் பலரைக்கைது செய்ய தேடி அலையுமளவிற்கு அவர்கள் என்ன தவறு செய்தார்கள்?
தமது பிரதேசத்தில் நடைபெறும் குறைகளை அடையாளங்காட்டுவதற்கும் அவைகள் நிவர்த்தி செயயப்படாத விடத்து போராடுவதற்கும் பொதுமக்களுக்கு உரிமையுள்ளது என்பதனை நாம் மறந்து விடவும் முடியாது.
ஆகவே, பொதுமக்கள் முன்வைத்த குறைகள் தங்களுக்கு முறையாக அதிகாரிகள் அனுப்பி வைத்தார்களா? அது தங்களுக்கு கிடைத்ததா? அவ்வாறு கிடைக்காவிட்டால், அது யாரின் தவறு? என்பதனை ஆளுநர் புரிந்து கொள்ளுமளவிற்கு பக்குவமானவர் என நாங்கள் நம்புகின்றோம்
தவறு செய்தவர்களுக்கு சட்டநடவடிக்கையெடுத்து தவறுகளை திருத்தி அக்கட்டிடத்தை மீண்டும் நீங்களே திறந்து வைக்க வேண்டுமென்பதே அவர்களின் விருப்பமுமாகும். அதே நேரம், இப்பொதுமக்கள் உங்களை தோளில் சுமந்து செல்லவும் தயாராக இருப்பார்கள் என்றார்.
Comments
Post a Comment