#கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக, #சஹிலா #இஸ்ஸதீன் கடமையேற்பு..!

#கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக, #சஹிலா #இஸ்ஸதீன் கடமையேற்பு..!
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி (திருமதி) சஹிலா இஸ்ஸதீன் தனது கடமைகளை இன்று (11) பொறுப்பேற்றுக்கொண்டார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமைற்றி வந்த வைத்தியர் ஐ.எல்.எம்.றிபாஸ் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளராக இடமாற்றப்பட்டதையடுத்து, ஏற்பட்ட இந்த வெற்றிடத்திற்கு பிரதிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக செயற்பட்டு வந்த வைத்திய கலாநிதி (திருமதி) சஹிலா இஸ்ஸதீனுக்கு பணிப்பாளர் பதவியுயர்வு வழங்கப்பட்டு இன்று அவர் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த கடமையேற்பு நிகழ்வை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு கேக்வெட்டி இனிப்புப் பொருட்கள் வழங்கி கொண்டாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !