கஜேந்திரகுமார் எம்பி மீது அழுகிய முட்டை வீச்சுத்தாக்குதல்

கஜேந்திரகுமார் எம்பி மீது அழுகிய முட்டை வீச்சுத்தாக்குதல் இன்று (15.12.2023) காலை மாதவனை, மயிலத்தமடு பிரதேசத்திற்கு வருகை தந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கெதிராக அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அழுகிய முட்டை வீச்சுத்தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், பிரதேச மக்கள் பயிர்செய்கைகளில் ஈடுபட்டு தத்தமது வாழ்வாதரங்களை மேற்கொள்ளும் நிலையில், பொலிசார் அப்பிரதேச மக்கள் நலனுக்காக நடுநிலையான செயற்பாட்டை முன்னெடுக்கும் போது இவ்வாறான அரசியல்வாதிகள் அப்பிரதேசத்திற்கு வருகை தந்து மக்களிடையே இனமுறுகலை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் தமது அரசியல் பலத்தைப் பயன்படுத்தி இவ்வாறான குழப்ப நிலையை உருவாக்கி வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோஷமெழுப்பினர். இதன் போது மட்டக்களப்பு மங்களாராம விகாராபதி அம்பிடடிய சுமன ரத்ன தேரரும் களத்திற்கு வருகை தந்திருந்ததுடன், மக்களின் எதிர்ப்பினையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் அவ்விடத்தை விட்டு திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !