அலிகாரின் இமாலய சாதனையோடு அலி ஸாஹிர் மௌலானாவின் முயற்சி வெற்றியை நோக்கி..! பாடசாலை மைதான அபிவிருத்திக்கு கல்வி அமைச்சு நடவடிக்கை.!
அலிகாரின் இமாலய சாதனையோடு
அலி ஸாஹிர் மௌலானாவின் முயற்சி வெற்றியை நோக்கி..!
பாடசாலை மைதான அபிவிருத்திக்கு கல்வி அமைச்சு நடவடிக்கை.!
அலிகார் தேசிய பாடசாலையின் பழைய மாணவனாக அதன் முன்னேற்றத்தில் என்றும் இணைந்து பயணிக்கும் ஒருவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா அவர்கள் காணப்படுகிறார்கள்.
அந்த வகையில் அண்மையில் உதைபந்தாட்ட போட்டியில் தேசிய ரீதியில் சாதித்த மாணவர்களது வெற்றியை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் கவனத்தை ஈர்க்கும் வகையில் நிறைவாக சகல வளங்களையும் கொண்ட பெரும் நகர பாடசாலைகளை எல்லாம் அடிப்படை வளங்களும் வசதிகளும் இல்லாத சிறு நகர பாடசாலை ஒன்று தோற்கடித்து வெற்றி வாகை சூடி திறமையை பறை சாற்றி உள்ளது.
கொழும்பிற்கு வெளியிலும் வசதிகளும் அபிவிருத்திகளும் விளையாட்டு ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் தேசிய சாதனை நிலைநாட்டிய ஏறாவூர் அலிகார் மாணவர்கள் பயிற்சி பெற்ற அடிப்படை வசதிகள் அற்ற இந்த மைதானத்தை பாருங்கள் என பாடசாலை மைதானத்தின் புகைப்படத்தையும் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தியது மட்டுமன்றி உடனடியாகவே இரு அமைச்சர்களுக்கும் பாடசாலையின் விளையாட்டு துறையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் இதற்கு அடிப்படையான மைதானம் காணப்படும் அவலம் குறித்தும் விளக்கிக் கோரிக்கை கடிதம் ஒன்றையும் பாராளுமன்றத்தில் வைத்து கலந்துரையாடி சமர்ப்பித்த போது இருவராலும் விரைவில் நடவடிக்கை எடுக்கிறோம் என்ற உறுதியும் பெறப்பட்டது .
அதற்கமைவாக இறைவன் உதவியினால் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக மைதான அபிவிருத்தி வேலைகளுக்காக மதிப்பீட்டு அறிக்கை கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா அவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகக்கு கல்வி அமைச்சின் பொறியியல் பிரிவின் பணிப்பாளர் திரு.காரியவசம் அவர்களினால் கிழக்கு மாகாண பாடசாலைகள் வேலைகள் பிரிவிற்கான பானிப்பாளரிடம் 14நாட்களுக்குள் அலிகார் தேசிய பாடசாலையின் மைதான அபிவிருத்தி வேலைகளுக்கான மதிப்பீட்டு அறிக்கையினை சமர்ப்பிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது,
கல்வி அமைச்சர் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் துரித நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அலிகாரின் விளையாட்டுத் துறை மேம்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று மாவட்டம் இன்னும் மேன்மை பெற்றிட வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
-செயிட் ஆஷிப்
Comments
Post a Comment