அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியுடன் அ/சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை இணைப்பது காலத்தில் தேவை

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியுடன் அ/சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை இணைப்பது காலத்தில் தேவை
இலங்கையில் இன்றுள்ள ஆசிரியர்கள் நியமன நியதிகளின் படி தற்காலத்தில் ஆ.ப. கல்லூரிகள் அவசியமற்ற ஒன்றாக மாறிவருது யாவரும் அறிந்ததே. இதனடிப்படையில் ஆ.ப.களின் வளங்களை அதனை ஆன்மித்திருக்கும் கல்விக் கல்லூரி அல்லது அரசின் தேவைக்காக அது பயன்படுத்தப்படும் நிலை ஏற்பட்டவுள்ளது இந்நிலையில் அ.தே.பா (MMV) மிக கடுமையான இட நெரிசலில் இருப்பதையும் உயர் தர வகுப்புகளை நடத்த இடமற்ற சூழ்நிலை நிலவுவதை அனைவரும் அறிந்ததே எனவே இதற்காக தற்காலிகமாக ஆ.ப.க. யில் சில பிரிவுகளை ஆரம்பித்து நாளடைவில் அதனை நிரந்தரமாக ஆக்குவதற்கு ஊரின் பிரமுகர்கள் அரசியல்வாதிகள் சிவில் சமூகத்தினர் இதில் அக்கரை கொள்ள வேண்டும் இது அட்டாளைச்சேனை ஊரின் குறிப்பாக தே.பாடசாலையின் பின்னுள்ள 25 வருட கால தேவையினை இது ( பிரச்சினைகளை) நிவர்த்தி செய்யும் என்பது யதார்த்தமாகும். இவ்விடயத்தில் சமூகம் பாரமுகமாகச் செயற்பாடுமாயின் எதிர்காலத்தில் ஊரின் தனித்துத்துவம் பாதிப்படும் (இதில் பல்கலைக்கழகம் போன்ற ஒரு நிறுவனத்தின் பகுதிகள் அல்லது ஏனைய உயர் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப் பட்டால் ஊரின் வீதிகளில் குடைகள் சில்மிஷம் நடக்கவும் கூடும்) # இதனை ஓர் ஊரின், பாடசாலையின் விடயமாகக் கருதாமல் எமது பிராந்தியத்தின் தேவை எனக் கருதி எதிர்காலத்தில் (புத்தளம்) விஞ்ஞானக் கல்லூரி போன்ற ஒன்றை உருவாக்க முடியும் என்பது எனது ஆருடமாகும். முன்னுதாரணம் --------------- அன்னையில் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் ஒரு பகுதியை அங்குள்ள ஓர் அமைச்சரின் முயற்சியால் பாடசாலை ஒன்றுக்கு வழங்கப்பட்டது மலையகத்தில் ஓர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை மலையகப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது மு.அ.நியாஸ். 22.12.2023.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !