சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படவிருந்த, 2 நீல மாணிக்கக்கற்கள் பொலிஸாரால் கைப்பற்றபட்டன...! அவற்றின் பெறுமதி 37 கோடி ரூபா...!
சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படவிருந்த,
2 நீல மாணிக்கக்கற்கள் பொலிஸாரால் கைப்பற்றபட்டன...!
அவற்றின் பெறுமதி 37 கோடி ரூபா...!
கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 37 கோடி ரூபா மதிப்புள்ள இரு மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கமைய, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படவிருந்த 2 நீல மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றின் மதிப்பு 37 கோடி ரூபா என இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வெலிவேரி பிரதேசத்தின் தேரர் ஒருவர் உட்பட இருவர் கொஸ்லந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments
Post a Comment